அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சியை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க். அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை மட்டுமே பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்சி அமெரிக்காவில் உருவாகியுள்ளது.ஆனால், எலான் மஸ்க்கின் புதிய கட்சியால் தேவையில்லாத குழப்பமே ஏற்படும் டிரம்ப் விமர்சித்து இருத்நார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருகின்றன. டெஸ்லா பங்குகள் 6.8% வரை சரிந்துள்ளன. இதனால், 15.3 பில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.3 லட்சம் கோடியாகும். டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து விலகிய பிறகு எலான் மஸ்க் சந்திக்கும் மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.