“கூட்டணி கட்சியில பாஜகவுக்கும் சேர்த்து நாங்கள் பேசுவோம்”… பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?… ராஜேந்திர பாலாஜி கேள்வி..!!
SeithiSolai Tamil July 11, 2025 07:48 PM

“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகாவை அடிமை என்று கூறுவது வேடிக்கையான அரசியல் நாடகம். பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா?” என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தீவிரத் தலைவரான ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் திமுகதான் பாஜக-அதிமுக கூட்டணியால் பதட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாஜகவை ஆதரிக்கிறது என்பதில்தான் திமுக பயப்படுறாங்க. அதனால்தான் நம்மளப் பற்றித் மட்டுமே திமுக பேசிக்கிட்டே இருக்காங்க. அவர்களது அரசியல் உரைகளில் எங்க பேரு இல்லாத நாள் கிடையாது,” என தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக குறித்த கேள்விகளுக்கு அதிமுக பதிலளிக்கும் அவர்களது குறைகளையும் நாங்கள் பேசுவோம் எனவும், எங்களைக் குறித்த கேள்விகளை அவர்களிடம் கேட்டாலும் அவர்கள் பதிலளிப்பார்கள். கூட்டணி கட்சிகள் இருதரப்பு பிரச்சனைகளையும் பேச தான் செய்வோம் என திட்டவட்டமாக கூறினார்.

திமுக அரசியலில் மறுபடியும் பழைய நாடகங்கள், மொழிப்பிரச்சனை, இன உணர்வு பேச்சுகள் ஆகியவற்றை தூண்டி மக்கள் உணர்வுகளை தூண்டும் முயற்சியில் ஈடுபடுகிறது என அவர் குற்றம்சாட்டினார். “இது கலைஞர்காலத்திலிருந்தே அவர்கள் ஏற்கும் பழைய ஸ்டண்ட். ஆனால் இப்போது அந்த நாடகம் செயல்படாது. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “திமுக காங்கிரஸோட, கம்யூனிஸ்ட்களோட கூட்டணி வைக்கிறது, சரி; ஆனா நாங்க பாஜகவோட கூட்டணி வைக்க கூடாதா? நாட்டு நலனுக்காக, மாநில நலனுக்காக எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவு அருமையானதும், ஆழமான அரசியல் புரிதலுடனும் அற்புதமான முடிவு,” என திமுகவின் இருமுக போக்கை விமர்சித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் திமுகவும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணியில் இருந்து வந்ததையும், இவை காலத்திற்கேற்ப மாற்றப்படும் நிலைப்பாடுகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்கால தேர்தல்களில், அதிமுக மக்களிடையே மிகுந்த ஆதரவுடன் வெற்றிபெறும்,” என பழைய வீரபதில்களை மீண்டும் கேட்டதோடு, பாஜக தொடர்பான கருத்துகளை இழிந்து பேசுவதை திமுக விட்டு விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.