ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி ... ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி!
Dinamaalai July 11, 2025 10:48 PM

 


 
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை  ஆகஸ்ட் 1  முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் நேற்று ஜூலை 10ம் தேதி தெரிவித்தார்.அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில், திடீரென வரிவிதிப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


இதில், கனடாவுக்கு 35 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது  ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்புகளை கனடா ஏற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சமூக வலைதளப் பக்கத்தில்  "அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடா தோல்வியடைந்து விட்டது" என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், பிரேசில், இலங்கை, அல்ஜீரியா, புரூணே, இராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு  ட்ரம்ப் வரிவிதிப்புக்கான கடிதங்களை வெளியிட்டுள்ளார். இதில், அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி கட்டண விகிதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக்  நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா  நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பைன்ஸுக்கு 20 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா இலங்கையுடன் 2.6 பில்லியன் டாலர், அல்ஜீரியாவுடன் 1.4 பில்லியன் டாலர், இராக்குடன் 5.9 பில்லியன் டாலர், லிபியாவுடன் 900 மில்லியன் டாலர், பிலிப்பின்ஸுடன் 4.9 பில்லியன் டாலர், புரூணேயுடன் 111 மில்லியன் டாலர் மற்றும் மால்டோவாவுடன் 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களின் மீது வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.  இந்த ஏழு நாடுகளுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே, 30 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.