பூமி (Earth) தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும் நிலையில், அது தான் ஒரு நாள் கணக்காக உள்ளது. பூமியின் சுழற்சிக்கு ஆகும் கால நேரத்தை அடிப்படையாக கொண்டே, ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், பூமி இயல்பை விட வேகமாக சுற்ற தொடங்கிவிட்டதாகவும், இதன் காரணமாக இனி நாட்கள் குறைவானதாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி, ஜூலை 09, 2025 தான் உலகின் மிகவும் குறுகிய நாள் (Shortest Day of Earth) என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில், பூமி வேகமாக சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும்சூரிய குடும்பத்தின் முக்கிய அங்கமாக உள்ள பூமி, தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அவ்வாறு பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள அதற்கு 24 மணி நேரம் தேவைப்படும். இதனை மையமாக கொண்டே ஒரு நாள் கணக்கிடப்படுகிறது. அதாவது, பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் நிலையில், சூரியனுக்கு எதிர் பக்கமாக உள்ள பூமி இருட்டாக மாறி விடும். அதை தான் இரவு என கூறுகிறோம். இதேபோல சூரியனின் பக்கம் இருக்கும் பகுதி வெளிச்சமாக இருக்கும். அதை தான் பகல் என கூறுகிறோம். இவ்வாறு பூமியின் சுழற்சியை மையப்படுத்தியே கால, நேரம் கணக்கிடப்படுகிறது.
இதையும் படிங்க : Liveable Cities 2025 : 2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள்.. பட்டியல் வெளியீடு!
வேகமாக சுற்றும் பூமி – விஞ்ஞானிகள் சொன்ன தகவல்இந்த நிலையில் வரும் வாரங்களில் பூமி வழக்கத்தை விட வேகமாக சுழலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக பகல் பொழுதுகள் சற்று நீளம் குறைந்ததாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு இடையே ஜூலை 9, 2025 மிகக் குறுகிய நாளாக இருந்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். அன்றைய தினம் பூமி மிக வேகமாக சுற்றியதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி ஜூலை 22, 2025 மற்றும் ஆகஸ்ட் 5, 2025 ஆகிய தேதிகளில் சந்திரனின் நிலை பூமியின் சுழற்சியை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : பாலின ஒடுக்குமுறை.. இரண்டு தாலிபான் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி..
பூமியின் சுழற்சியில் எவ்வளவு நேரம் குறையும்?பூமி வேகமாக சுற்றும் என்பதால் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழாது. அதாவது, 1.3 விநாடிகள் அல்லது 1.5 விநாடிகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பூமி சுழலும் சராசரி வேகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.