2022ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயர் வைத்தனர்.
தொடர்ந்து மாடலிங், நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா கணவர், குழந்தைகள் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தநிலையில் விக்னேஷ் சிவனை நயன்தாரா பிரிகிறார் என்ற தகவல் பரவி வந்தது. குறிப்பாக நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்ததாகவும், அதில் முட்டாள்தனமாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் நாம் தான் கஷ்டப்பட வேண்டியது வரும் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்படியொரு பதிவை நயன்தாரா போடவில்லை என்று நயன்தாரா தரப்பு மறுத்தது.
இந்தநிலையில் தங்கள் மீதான வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாரா ஒரு பதிவை போட்டுள்ளார்.அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், விக்னேஷ் சிவனுடன் வேடிக்கைப் பார்க்கும் கோணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்களைக் குறித்த வதந்திகளைப் பார்க்கும்போது எங்களின் ரியாக்ஷன்” என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.