5 வருடமாக கணவன்- மனைவி போல வாழ்ந்தோம்… திருமணம் மோசடி செய்ததாக ஆர்சிபி கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் அதிரடி புகார்… மறுப்பு தெரிவித்த யாஷ் தயாள்.!!!
SeithiSolai Tamil July 11, 2025 04:48 AM

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காசியாபாத் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆர்சிபி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது திருமணம் மோசடி புகார் அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக தானும், யாஷ் தயாாலும் கணவன்- மனைவி போல் வாழ்ந்ததாகவும், அதனால் உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் தன்னை பயன்படுத்தியதாகவும் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரங்களான ஸ்கிரீன்ஷாட்கள், மெசேஜ்கள், வீடியோ கால் ரெக்கார்டுகள், புகைப்பட ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த யாஷ் கூறியதாவது, அந்தப் பெண் தான் என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார். அவருக்கு ஐபோன் மற்றும் பல லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அதனை அவர் திரும்ப தரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அப்பெண்ணின் உறவினர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்காக பணம் அளித்ததாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.