டாடா நெக்ஸான் கார், ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.60 லட்ச ரூபாயாக இருக்கிறது.மறுபக்கம் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாடா கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது, டாடா Curvv மற்றும் நெக்ஸான் EV கார்களுக்கு லைப் டைம் பேட்டரி வாரண்டியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது கார் ரெஜிஸ்டர் செய்த நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும். 15 ஆண்டுகளுக்குள் எத்தனை கிமீ ஓட்டியிருந்தாலும் இந்த வாரன்டி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை இனிமேல் புதிதாக இந்த கார் வாங்குபவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.