கடலூரில், வட மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் 3 அப்பாவி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கேட் கீப்பராக தற்போது தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில் நேற்று பயணிகள் ரயில், ஒரு தனியார் பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். சில மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்து நடந்த போது, ரயில்வே கேட் திறந்த நிலையில் இருந்ததாகவும், ரயில் வருவதற்கான எச்சரிக்கை இல்லாததால் தான் வேன் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, விபத்து நிகழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து, கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா மீது சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர் அலட்சியமாக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில் தற்போது தமிழர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?