யானை தாக்கியதில், அருணாசலப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அருணாசலப் பிரதேச மாநிலம், திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (65). இவர் நேற்று ஜூலை 9ம் தேதி நாம்சங் கிராமத்தில் இருந்து தியோமாலி நகரத்துக்கு தனது வழக்கமான நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காப்சென் ராஜ்குமாரின் மரணத்துக்கு அருணாசலப் பிரதேசத்தின் முதல்வர் பேமா காந்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை அம்மாநில அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார். முன்னதாக, காப்சென் ராஜ்குமார், 1985 ம் ஆண்டு முதல் 1990 வரை அம்மாநிலத்தின் வடக்கு கோன்சா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?