அடுத்தடுத்து வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்கள்... 42 வீடுகள் தரைமட்டமான கொடூரம்!
Dinamaalai July 10, 2025 03:48 AM

திருப்பூரில் அடுத்தடுத்து வரிசையாக 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில், அந்த பகுதியில் இருந்த தகர கொட்டகை 42 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. 

திருப்பூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சாயாதேவி. இவருக்கு சொந்தமான இடத்தில்  4 கேஸ் சிலிண்டர்கள்  அடுத்தடுத்து வெடித்து சிதறியதில், அந்த பகுதியில் இருந்த 42 தகர கொட்டகை வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. 

திருப்பூர் கல்லூரி சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் தகரக் கொட்டகை வீடுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி வேலைப் பார்த்து வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


ஆனால், பலர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.