பேச்சுலர் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஷ்ணு விஷால்!
Tv9 Tamil July 10, 2025 12:48 AM

நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal) அவரது தம்பி ருத்ரா நாயகனாக நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தை புரமோட் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அடுத்ததாக தான் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படத்தில் முதல் 45 நிமிடங்கள் முழுவதும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து இருக்கிறது என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈத்து வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தனது தம்பி நாயகனாக நடிக்கும் ஒஹோ எந்தன் பேபி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தாலும் அவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இரண்டு வானம். இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜு நாயகியகா நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Also Read… Vishnu Vishal : முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!

ஓஹோ எந்தன் பேபி படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Love you #AamirKhan sir for who you are to me.. #OhoEnthanBaby pic.twitter.com/qSvjzSufoI

— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal)

Also Read… ஜெய் பீம் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ்!

விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம்:

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லால் சலாம். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.