தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு கடத்திருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் தமிழ் உச்ச நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த கூலி படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில், தலைவர்171 (Thalaivar 171) திரைப்படம் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிங்கிள் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் படம் எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichandran)இசையமைத்துள்ளார்.
இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து சிக்கிட்டு வைப் (Chikitu Vibe) என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்துப் படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடனத்தில் இந்த படலானது வரும் 2025, ஜூலை 11ம் தேதி மலை 6 மணிக்கு வெளியாகிறது எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூலி படக்குழு வெளியிட்ட 2வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு பதிவு :பூஜா ஹெக்டேவின் நடனத்தில் கூலி 2வது பாடல் :The Monica fever is about to begin! 💥💃🏻 #Coolie Second Single #Monica featuring @hegdepooja releasing on July 11, 6 PM ❤️🔥#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv… pic.twitter.com/G8YYHx1jLI
— Sun Pictures (@sunpictures)
இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இதுவரை வெளியான லோகேஷ் கனகராஜின் படங்களில், கூலி படத்தில்தான் முதன் முறையாக சிறப்புப் பாடல் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :விஜய் சேதுபதி – நித்யா மேனனின் ‘தலைவன் தலைவி’ பட இசை வெளியீட்டு விழா எப்போது? அறிவிப்பு இதோ!
இந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே , நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடனமாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே இந்த படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதற்கு மட்டும் சுமார் ரூ. 3 கோடியைச் சம்பளமாகப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கூலிரஜினிகாந்த்தின் நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!
இந்த படத்தில் நடிகர்கள் அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பான் இந்திய நடிகர்களின் மகா சங்கமமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் 2025ம் ஆகாஷ் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.