விருதுநகர் மாவட்டத்தில் மணல் லாரியும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் படுகாயமடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்லூரி பேருந்து ஒன்று கிருஷ்ணன் கோயில் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. விருதுநகர்- அழகாபுரி விளக்கு பகுதியில் பேருந்து திரும்பிய போது, எதிரே மணல் ஏற்றி வந்துக் கொண்டிருந்த டிப்பர் லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான விருதுநகர் யானை குழாய் தெரு தங்க மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கல்லூரி பேருந்து ஓட்டுநர் அருப்புக்கோட்டை சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?