பைக் மீது லாரி மோதி 2 மகன்களும் உடல்நசுங்கி பலி; தந்தை கண் எதிரே சோகம்!
Dinamaalai July 09, 2025 01:48 PM

பள்ளிக்கு தனது மகன்களை பைக்கில் அழைத்து சென்ற நிலையில், லாரி மோதி பரிதாபமாக இரு மகன்களும் பலியான சம்பவம் புதுவையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர்  தொண்டமாநத்தம், ஆனந்த விநாயகர் நகர், ரங்கசாமி வீதியில் வசித்து வருபவர்  நடன சபாபதி(45) . அரசு கான்பெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி அனிதா. இவர்களது இரு மகன்கள் ஜீவா (14), துவாரகேஷ் (8). இவர்கள் முத்தரையர் பாளையம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்று காலை நடன சபாபதி, தனது 2  மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

ஊசுட்டேரி - பொறையூர் செல்லும் சந்திப்பில்  திருவக்கரையில் இருந்து மண் ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட டிப்பர் லாரி  அதிவேகமாக வந்து, நடன சபாபதி வந்த பைக்கின் பின்பக்கம் மோதியது.  இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சிறுவர்கள் மீது டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் நடன சபாபதி கால் நசுங்கியது.  

விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக காயமடைந்த தந்தை மற்றும் சிறுவர்களின் உடல்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை நடனசபாபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இதனிடையே, புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியைச் சேர்ந்த வைத்தி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை கடலூரைச் சேர்ந்த ஜெயக் குமார் (60) என்பவர் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

விபத்து குறித்து அறிந்த போக்குவரத்து எஸ்.பி பிரவீன்குமார்  உடனடியாக பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும் என உறுதியளித்தனர். விபத்து காரணமாக ஊசுட்டேரி சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.