அனுஷ்காவின் திருமணம் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தனக்கு திருமணம் நடந்தால் தானே அறிவிப்பதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணம், காதல் குறித்து அனுஷ்கா மனம் திறந்து பேசியுள்ளார். இது பற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, திருமணம் என்பது புனிதமானது. அவசரப்பட்டு எல்லாம் திருமணம் செய்ய முடியாது. அதுவாக நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
"நான் 6ம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, 'நான் உன்னை காதலிக்கிறேன்' என கூறினான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக சொன்னான். அந்த நேரத்தில் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், 'சரி' என அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அது, என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது" என அனுஷ்கா கூறியுள்ளார்.