Director Ram : குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் என்பதும் வன்முறைதான்.. இயக்குநர் ராம்!
Tv9 Tamil July 09, 2025 05:48 AM

இயக்குநர் ராம் (Ram) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் கூறப்படும் கருத்துக்கள் மக்களிடையே வரவேற்பைப் பெறும்.  இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ (Paranthu Po). நடிகர் மிர்ச்சி சிவாவின் (Shiva) முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது, கலகலப்பான படமாகவும் அதே நேரம் கருத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது. மிர்ச்சி சிவாவின் நடிப்பில் இந்த படமானது கடந்த 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் அஞ்சலி (Anjali) , கிரேஸ் ஆண்டனி (Grace Antony) மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், படக்குழு மக்களைத் திரையரங்குகளுக்குச் சென்று சந்தித்தும் வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராம் மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து பேசியிருந்தார். அதில் இயக்குநர் ராம் குழந்தைகளைப் பற்றிப் பேசியிருந்தார் அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

குழந்தைகளைப் பற்றிப் பேசிய இயக்குநர் ராம் :

அந்த சந்திப்பில் இயக்குநர் ராம் , “பொதுவாகக் குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறையான விஷயம். அந்தந்த வயதுக் குழந்தைகள், அந்தந்த வயதிற்கு ஏற்றார் போல நடக்கின்றனர். ஆனால் அந்த விஷயத்தை எந்த பெற்றோர்களும் புரிந்துகொள்ளவில்லை. 90ஸ் கிட்ஸ் பெற்றோர்கள் குழந்தைகளை எந்தவிதபயமும் இல்லாமல் வெளியே விடுவார்கள், அவர்களைச் சுதந்திரமாகப் பல இடங்களுக்கும் செல்ல அனுமதிப்பார்கள்.

இதையும் படிங்க :சசிகுமாரின் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா நாகார்ஜுனா.. எந்த படம் தெரியுமா?

ஆனால் இப்போதுள்ள அப்பாக்கள் மற்றும் அம்மக்கள் குழந்தைகளை மிகவும் பொத்தி பொத்தி பாதுகாத்த வருகின்றனர். மேலும் அந்த குழந்தைகளுக்குச் சுதந்திரமும் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள்” என இயக்குநர் ராம் பேசியிருந்தார். இது தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பறந்து போ படக்குழு சந்திப்பு வீடியோ பதிவு :

Director Ram’s #ParanthuPo – Received Good response..✌️ Film running in theatres now..🤝pic.twitter.com/vQadcLGrNQ

— Laxmi Kanth (@iammoviebuff007)

ராமின் இயக்கத்தில் வெளியான இந்த பறந்து போ திரைப்படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களமானது  அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான பாசப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க :வாரிசு நடிகராக இல்லை என்றால் சினிமாவில் அந்த வாய்ப்பே உங்களுக்கு கிடைக்காது – விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

திரையரங்குகளில் வெளியாகிவரும் இப்படம் ஒரு பீல் குட் திரைப்படமாக இருக்கிறது. இப்படத்தின் வரவேற்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.