மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் உன்னி முகுந்தன் (Actor Unni Mukunthan). இவரது படங்கள் மலையாள சினிமா ரசிகர்களால் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் அதிகம் கொண்டாடப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கெட் செட் பேபி. முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமாண்டிக்கை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் உன்னி முகுந்தன் இயக்குநர் அருண் ஜோஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மிண்டியும் பரஞ்சும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் உன்னி முகுந்தின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்ட செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகர் உன்னி முகுந்தன் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, முக்கிய அறிவிப்பு எனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு @iamunnimukundan ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கணக்கிலிருந்து வெளிவரும் எந்தவொரு பதிவுகள், DMகள், ஸ்டோரிகள் அல்லது குறுஞ் செய்திகள் என்னிடமிருந்து வந்தவை அல்ல. அவை ஹேக்கர்களால் அனுப்பப்படுகின்றன.
Also Read… புஷ்பா படத்தில் அந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது – நடிகை ராஷ்மிகா மந்தனா
இந்த நேரத்தில் அந்தக் கணக்கிலிருந்து எதற்கும் பதிலளிக்கும் விதமாக, சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்யவோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம். இந்தச் சிக்கலைத் தீர்க்க தொடர்புடைய குழுக்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். சிக்கல் சரிபார்க்கப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் உங்கள் அனைவரையும் நான் தொடபு கொள்கிறேன். உங்கள் ஆதரவு மற்றும் எச்சரிக்கைக்கு நன்றி என்றும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
நடிகர் உன்னி முகுந்தனின் முகநூல் பதிவு:Also Read… நோ ஃபேமிலி… நோ ஃப்ரண்ட்ஸ்… கூலி படத்திற்காக இரண்டு வருஷம் கடினமா உழைச்சிருக்கேன் – லோகேஷ் கனகராஜ்
தமிழில் அறிமுகம் ஆகி மலையாளத்தில் கலக்கும் நடிகர் உன்னி முகுந்தன்:நடிகர் உன்னி முகுந்தன் தமிழில் வெளியான சீடன் படத்தின் மூலமாகவே சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களை நடிக்கவில்லை. ஆனால் மலையாள சினிமாவில் தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்து வருகிறார்.