பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்களுடன் அமைச்சர் சிவசங்கர் தேரை வடம்பிடித்து இழுத்தார். அப்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. வடம் பிடித்து இழுத்த தேரின் அச்சு முறிந்து மற்றொரு தேரின் மீது சாய்ந்ததால், அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் எதுவுமில்லை.
அமைச்சர் சிவசங்கர் ஏற்பாட்டில், சரிந்த தேரிலிருந்து பொக்லைன் உதவியோடு சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. பழைய தேரின் சக்கரங்கள் பழுது என தெரிந்தும் தேரை இழுத்துள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?