மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில் இருந்து சத்தீஸ்கரின் ராய்ப்பூருக்கு இன்று ஜூலை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணிக்கு 51 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அலாரம் அடித்தது. இதனையடுத்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்து விமானத்தை மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.
பின்னர் விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். பயணிகளுக்கு விமானக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என இண்டிகோ நிர்வாகம் கூறியுள்ளது. "விமானத்தில் கோளாறு இருப்பது பற்றி விமானி தெளிவாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அலாரம் அடித்ததையடுத்து பாதுகாப்பு கருதி விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதுகுறித்து விசாரிக்கப்படும். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?