Yash Dayal: ஆர்சிபிக்கு மேலும் சிக்கல்..! வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது பெண் அடுக்கிய புகார்.. விரைவில் கைதா..?
Tv9 Tamil July 09, 2025 12:48 AM

உத்தரபிரதேசத்தை அடுத்த காசியாபாத்தின் இந்திராபுரம் காவல் நிலைய பகுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் (Yash Dayal) மீது ஒரு பெண் திருமண வாக்குறுதியை அளித்து நிதி, மன மற்றும் உடல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், தயாள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. காசியாபாத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாக்குறிதி அளித்ததாகவும், இதனை அடிப்படையாக கொண்டு தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்திருந்தாகவும், தொடர்ந்து நிதி மற்றும் மன அழுத்தம் தன் மீது கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு:

ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு காவல்துறையினர் இது தொடர்பாக பல நாட்கள் விசாரித்தனர். இதன்பிறகு, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 69ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, இந்த விவகாரம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, இந்த வாக்குமூலத்தை நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

யாஷ் தயாளுக்கு சிக்கல்:

🚨BREAKING NEWS: RCB pacer Yash Dayal has been booked after serious allegations were made by Ujjwala Singh, a resident of Indirapuram, Ghaziabad.

Police have reportedly found sufficient evidence to register a case. Investigation is currently underway.#YashDayal #RCB pic.twitter.com/Vitevv1y7B

— राजपूत सवित सिंह (@Savit12)

மேலும், யாஷ் தயாளுடன் தொடர்புடைய சில ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார். இது உண்மையானது தான என்று காவல்துறையினர் சரிபார்த்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், யாஷ் தயாள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை காவல்துறையினர் முடிவு செய்வார்கள்.

எஃப்.ஐ.ஆரில் பிரிவு BNS 69ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொதுவாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபாரம் விதிக்க வகை செய்யும். மேலும், இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாது. கடந்த 2025 ஜூன் 21ம் தேதி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் அமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.