சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டுள்ளது. இதில் கோகிலாவுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. உற்றார், உறவினர்கள் எல்லாம் வருகை புரிந்துள்ளனர். சம்பந்திகள் நலங்குக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். முக்கியமாக ஊரில் இருந்து வரிந்து கட்டிக்கொண்டு பேத்தியின் திருமணத்துக்கான வேலைகளைச் செய்ய பாட்டிகள் பஞ்சவர்ணக்கிளியும், மயிலுவும் மல்லுக்கு நிற்கின்றனர். அவர்களது சண்டையை ஆனந்தி தீர்த்து வைக்கிறாள்.
இந்நிiலியல் சேகர் மயிலு பாட்டியைத் தன் வலைக்குள் சிக்க வைக்கிறான். அதாவது அழகப்பன் தனக்குத் தானே பெண்ணைக் கட்டித் தருவதாகக் கூறினான். ஆனால் எவனோ ஒரு கண்டக்டருக்குக் கட்டிக் கொடுக்கிறானே. இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது என மனதுக்குள் சதி செய்து அதை நடத்துவதற்காக மயிலு பாட்டியை வலைக்குள் சிக்க வைக்கிறான்.
அவன் திட்டம் என்னவென்றால் அவன் கொடுக்கும் மயக்க மருந்து பொடியை எந்த வகையிலாவது மயிலு பாட்டி கோகிலாவுக்குக் கொடுக்க வேண்டும். அவள் மயங்கி விழுந்ததும் ஊரார் முன்னிலையில் அவள் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம் என்று சொல்லி கல்யாணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதுதான் அவனது சதித்திட்டம்.
இதற்கு முதலில் மறுக்கும் மயிலு பாட்டி அப்புறம் அவன் உனக்கு தனியாக வைத்தியசாலை கட்டித் தருகிறேன் என்று சொன்னதும் சம்மதிக்கிறாள். மயிலு ஒரு மருத்துவச்சி. அதாவது பழங்கால சித்த மருந்துகளைத் தெரிந்து வைத்துள்ளவர். அதனால் சேகரின் பேச்சை நம்பிய மயிலு அவனது சதிக்கு ஓகே சொல்லி விடுகிறாள்.
இதற்கிடையே சௌந்தர்யா கொண்டு வந்த மாலையை கூட்டத்தில் ஒருவன் தட்டி விட அது அன்புவுக்கும், ஆனந்திக்கும் இடையே கழுத்தில் எதேச்சையாக விழுந்து மாலை மாறுகிறது. அப்போது ஆனந்தி 'என் கழுத்தில் ஏன் மாலையைப் போட்டீக'ன்னு கேட்கிறாள். 'நீ ஏன் என் கழுத்தில போட்டே'ன்னு அன்பு கேட்கிறான். 'அது தெரியாம விழுந்துச்சு'ன்னு ஆனந்தி சொல்கிறாள். 'நான் போட்டது தெரிஞ்சி விழுந்துச்சு'ன்னு சொல்கிறான் அன்பு.
சௌந்தர்யா 'என்ன அன்பு அண்ணேன் நீ ஆசைப்பட்ட மாதிரி மாலை எல்லாம் மாத்தியாச்சு போல'ன்னு சொல்கிறாள். அதற்கு 'மாலை மட்டுமல்ல. ஆனந்தியின் கழுத்தில் தாலியும் கட்டப்போறேன் பாரு'ன்னு சொல்கிறான் அன்பு. இன்றைய எபிசோடில் கோகிலா பாலைக் குடிச்சிட்டா. இன்னும் கொஞ்ச நேரத்தில் மயங்கி விழப்போகிறாள்னு சேகர் சந்தோஷமாகச் சொல்கிறான். ஆனால் ஆனந்தி மயங்கி விழுகிறாள். அப்போது மயிலு சேகரிடம் 'ஆனந்தி கர்ப்பமா இருக்காடா'ன்னு சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது சுயம்பு கல்யாண வீட்டுக்கு வருகிறான்.