ஹைதராபாத்தில் கள்ளுக்கடைகளில் கள் குடித்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், குகட்பள்ளி, பாலநகர் மற்றும் பிற பகுதிகளில் இருக்கும் வெவ்வேறு கள்ளுக்கடைகளில் கள் குடித்தவர்களுக்கு அடுத்த சில மணி நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலி யும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 28 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சைபராபாத் பகுதி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் கலால் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். கள் அருந்திய கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?