உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 – 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா தேஷ்முக் முன்னேறினார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். இதன்மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றர்.
இந்நிலையில் இந்திய வீராங்கனை திவ்யா சாம்பியனாகியுள்ளார். 2 சுற்றுகள் டிராவான நிலையில், இன்று நடைபெற்ற டை பிரேக்கர் சுற்றில் அனுபவம் வாய்ந்த கோனேரு ஹம்பியை அவர் வீழ்த்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாகும். இதன் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்தது. இதையடுத்து இன்று (ஜூலை.28) வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நடந்தது. இதில் ஹம்பியை வீழ்த்தி திவ்யா சாம்பியன் பட்டம் வென்றார்.