பஞ்சாங்கம் ஜூலை 22- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
29.07.2025 செவ்வாய்க்கிழமை/ மங்கள(பௌம) வாஶரம்
வருடம்~வருஷம் விஶ்வாவஶு/ விஶ்வாவஶ்வ நாமஸம்வத்ஸரம்
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது~ க்ரீஷ்மருது
மாதம்/தேதி~ ஆடி௴~ கடக௴~13~
பக்ஷம்~ ஶுக்லபக்ஷம்
திதி- பஞ்சமி இரவு 02.31 வரை பிறகு ஷஷ்டி
ஶ்ரார்த திதி~பஞ்சமி
நக்ஷத்திரம்~உத்திரம் இரவு 09.50 வரை பிறகு ஹஶ்தம்
யோகம்~ஶித்த/அமிர்தயோகம்
யோகம்~ஶிவம்
கரணம்~பவம்
ராகுகாலம்~ மாலை~03.00~04.30
எமகண்டம்~காலை~09.00~10.30
குளிகை~மதியம்~12.00~01.30
ஶூர்யோதயம் காலை~06.04
ஶூர்யாஸ்தமனம்~மாலை~06.38
சந்திராஷ்டமம்~ அவிட்டம்/ஶதயம்
சூலம் ~வடக்கு
இன்று-கருடபஞ்சமி
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
மேஷ ராசிக்கான பலன்கள்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரிஷப ராசிக்கான பலன்கள்
திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். மறைமுக தடைகளால் காரிய தாமதம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சோர்வுகள் ஏற்படும்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
மிதுன ராசிக்கான பலன்கள்
ஆரோக்கியத்தில் இருந்த மந்த தன்மை விலகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் மிதவேகம் நல்லது. சமூக பணிகளில் தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : மந்த தன்மை விலகும்.
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
கடக ராசிக்கான பலன்கள்
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பூமி விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.
பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
ஆயில்யம் : சிக்கனம் வேண்டும்.
சிம்ம ராசிக்கான பலன்கள்
எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக பணிகளில் ஆதாயம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : ஆதாயகரமான நாள்.
உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.
கன்னி ராசிக்கான பலன்கள்
பழைய நினைவுகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் நேரம் விரயமாகும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : குழப்பங்கள் நீங்கும்.
அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
துலாம் ராசிக்கான பலன்கள்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்கள் செல்வதற்கான சூழல் ஏற்படும். உறவுகள் இடத்தில் பொறுமையை கையாளவும். நயமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகள் முடிவதில் போராட்டம் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : நம்பிக்கை மேம்படும்.
விசாகம் : விரயங்கள் ஏற்படும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள்
இறை வழிபாடு தொடர்பான பயணம் சாதகமாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : பயணம் சாதகமாகும்.
அனுஷம் : சுறுசுறுப்பான நாள்.
கேட்டை : அனுகூலமான நாள்.
தனுசு ராசிக்கான பலன்கள்
மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் மேம்படும். கருத்துக்களுக்கு உண்டான ஆதரவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மூலம் : ஆர்வம் மேம்படும்.
பூராடம் : கவனத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : அலைச்சல் மேம்படும்.
மகர ராசிக்கான பலன்கள்
தள்ளிப்போன சுப காரியம் கைக்கூடி வரும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : மதிப்புகள் ஏற்படும்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.
கும்ப ராசிக்கான பலன்கள்
உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : மாற்றங்கள் பிறக்கும்.
சதயம் : ஆரோக்கியம் சீராகும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
மீன ராசிக்கான பலன்கள்
கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!
பஞ்சாங்கம் ஜூலை 22- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil