திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் பார்த்திபன் என்பவர் தலைமை காவலராக வேலை பார்க்கிறார். கடந்த வருடம் இவருக்கு இடையபட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான ஒரு வாரத்திலேயே பார்த்திபனின் நடவடிக்கை சரி இல்லாததால் வினோதினி தனது கணவரை தீவிரமாக கண்காணித்து வந்தார். அவர் வாட்ஸ் அப்பில் பல பெண்களுடன் பேசுவது, ஆபாச புகைப்படங்கள் வைத்திருப்பதை கண்டு வினோதினி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கேட்டபோது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பார்த்திபன் தனது மனைவியை வீட்டை விட்டு விரட்டி அடித்தார். இந்த சம்பவம் குறித்து வினோதினி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பார்த்திபன் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று போலீசார் பார்த்திபனை கைது செய்து திண்டுக்கல் மத்திய சிறையில் அடைத்தனர்.