Modi: "பாகிஸ்தானின் விமான தளங்கள் ICU-ல் இருக்கின்றன" - மக்களவையில் பிரதமரின் `நறுக்' வசனங்கள்!
Vikatan July 30, 2025 04:48 AM

நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக பேசிய ராகுல் காந்தி முதலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கோணங்களில் பாஜக அரசின் மீது விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், மோடியின் உரையில் எல்லாவற்றுக்கு பதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், "நான் இங்கே இந்தியாவின் பக்கத்தை முன்வைக்கவும், அதைப் பார்க்க மறுப்பவர்களுக்கு ஒரு கண்ணாடியைக் காட்டவும் வந்து நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டார் மோடி.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ராணுவத்தைப் பாராட்டி பேசிய மோடி, காங்கிரஸ் அரசியல் செய்வதிலேயே கவனமாக இருந்ததாக சாடியிருந்தார். மோடி பேச்சில் வெளிப்பட்ட சில `நறுக்'-குகளை இங்கே காணலாம்.

`நறுக்'-குகள்
எங்கள் ஆயுதப் படை ஏப்ரல் 22-ம் தேதி (பஹல்காம் தாக்குதல்) 22 நிமிடங்களுக்குள் துல்லியமான தாக்குதல்களுடன் பழிவாங்கின.
இன்று பாகிஸ்தானின் விமான தளங்கள் ஐசியுவில் இருக்கின்றன.
நாங்கள் புதிய இயல்பை நிலைநிறுத்தியிருக்கிறோம்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கினால், இந்தியா துரத்தி வரும் என்பதைத் தெரிந்துகொண்டுள்ளனர்.
சிந்தூர் முதல் சிந்து (நதி) வரை நாம் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
எங்களுக்கு உலகளாவிய ஆதரவு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என் நாட்டின் துணிச்சலான வீரர்களின் வீரத்திற்கு, காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை

``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

"எந்த உலத் தலைவரும் இந்தியாவை போரை நிறுத்துமாறு கூறவில்லை" (ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்).
பயங்கரவாதிகள் அழுகிறார்கள், அவர்களின் மூளையாக இருப்பவர்கள் அழுகிறார்கள், அவர்கள் அழுவதைப் பார்த்து, சிலர் இங்கேயும் அழுகிறார்கள்.
ஒருபக்கம் இந்தியா தன்னிறைவை நோக்கி நகர்கிறது, துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் அரசியல் செய்வதற்கு பாகிஸ்தானிடமிருந்து பிரச்னைகளை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.
இப்போது காங்கிரஸ் பாகிஸ்தான் ரிமோட் கன்ட்ரோல் பிடியிலிருக்கிறது; பாகிஸ்தான் சொல்வதை மட்டும்தான் நம்புகிறது!

``காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது" - பிரதமர் மோடி முழு உரை - லின்க்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.