திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோட்டில் பெருமாநல்லூரை சேர்ந்த பிரகதீஷ் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி இரவு கடையில் இருந்த நகைகளை சோதனை செய்து பார்த்தபோது சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனால் பிரகதீஷ் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது கடைக்கு நகை வாங்குவது போல வந்த நான்கு பெண்கள் ஊழியர் அசந்த நேரத்தில் சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட வெளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரகதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணி, ஜெயமாலா, தாரணி, ஷோபனா ஆகிய நான்கு பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.