மனசுல ஹீரோன்னு நெனப்பு போல..! பார்த்தாலே பதறுது.. ஓடும் ஆட்டோவின் பின்புறம் நின்று.. வாலிபரின் திகிலூட்டும் செயல்… வைரலாகும் வீடியோ…!!!!
SeithiSolai Tamil July 29, 2025 03:48 PM

நவி மும்பை நகரில், ஓடும் ஆட்டோவின் பின்புறத்தில் நின்று அபாயகரமான ஸ்டண்ட் செய்த இருவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சாலையில் குறைந்த போக்குவரத்து இருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோவில், ஒரு ஆண் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவின் பின்புற ஸ்டெப்பில் நின்று, அதை கைகொண்டு பிடித்தபடியே பயங்கரமாக பயணம் செய்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த திகிலூட்டும் செயலை பின்புறத்தில் வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி வீடியோபதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து இது வைரலானது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், ஸ்டண்ட் செய்த நபரையும், ஆட்டோ ஓட்டுநரையும் கைது செய்துள்ளனர். இவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது சமூக வலைதளங்களில் பிரபலமான “ரீல்ஸ்” நபர்களால் செய்யப்படும் ஸ்டண்ட் கலாசாரத்தில் பங்குள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.