“தேனீக்கள் கூடு”… அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற வட மாநில தொழிலாளி… கத்தி கூச்சலிட்ட 14 வயது சிறுமி… அதிர வைக்கும் சம்பவம்…!!!!
SeithiSolai Tamil July 30, 2025 03:48 AM

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனை அகற்றுவதற்காக ஒரு வட மாநில தொழிலாளியை அழைத்து சென்றுள்ளனர். அந்த நபர் அந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு 16 வயது சிறுமி தனியாக இருப்பதை கவனித்து திடீரென அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

இதனால் சிறுமி பயத்தில் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வட மாநில தொழிலாளியைப் பிடித்து சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை கைது செய்து பின்னர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.