வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!
Webdunia Tamil July 30, 2025 03:48 AM

தெலங்கானா மாநிலம் ராமகிருஷ்ணபூர் நகரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், லாவண்யா என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின்போது, லாவண்யாவின் பெற்றோர் 50 லட்சம் ரூபாய் வரதட்சணை பணமும், 25 சவரன் நகையும் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், சுரேஷ் - லாவண்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சமீபத்தில், லாவண்யா ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து, லாவண்யாவின் தாய், தனது மகளின் உடலை கணவர் சுரேஷின் வீட்டின் முன் வைத்து, வரதட்சணையாக கொடுத்த 50 லட்ச ரூபாய் மற்றும் 30 சவரன் தங்க நகைகளைத் திரும்ப கொடுத்தால் மட்டுமே உடலை இறுதிச்சடங்கு செய்வோம் என்று கூறி கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.

இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், இரு தரப்பிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.