தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம், தெர்மல்நகர், லேபர் காலனியைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகள் தர்ஷினி (18). கல்லூரி மாணவி. இவர் இன்று காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தங்கை, நான் படிக்க வேண்டியிருக்கிறது. இங்கே உட்கார்ந்து பேசாதே என்று கண்டித்து விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது.
சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது தர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து தெர்மல் நகர் காவல் நலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம குறித்து வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?