“ரூ.10 ஆயிரம் இருந்தாதான் வேலை நடக்கும்”… நேர்மை தவறிய நகராட்சி பெண் ஊழியர்… போலீஸ் அதிரடி…!!!
SeithiSolai Tamil July 31, 2025 04:48 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணித் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர், தனது மனைவி காளிஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்ய கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் சமீபத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த வேலைக்கு உதவியாளராக பணியாற்றும் நவீனா என்ற அரசு ஊழியர், பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அச்சமையத்தில் செல்வகுமார் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். போலீசார் திட்டமிட்டு குறித்த பணத்தை நவீனாவிடம் வழங்கச் சொன்னார்கள். செல்வகுமார் பணத்தை நவீனாவிடம்பணம் கொடுக்கும் போது , அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் பீட்டர்பால் தலைமையிலான குழுவினர் கையும் களவுமாக நவீனாவை கைது செய்து, லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.