ஆத்திரமடைந்த காவலர்கள் மூதாட்டியை தாக்கியதில் பலி! நடந்தது என்ன?
Seithipunal Tamil July 31, 2025 03:48 AM

கன்னியாகுமரி மத்திகோடு பகுதியை சேர்ந்த 80 வயதான சூசைமரியாள்.இவரது பேரனை ஒரு வழக்கு சம்பந்தமாக கைது செய்வதற்கு 4 காவலர்கள் அதிகாலையில் வீட்டிற்குல் நுழைந்தனர்.

அப்போது மூதாட்டியின் பேரனை காவலர்கள் இழுத்தம்போது, சூசைமரியாள் எனது பேரனை விடுங்கள், எதற்காக இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.அப்போது வயதான மூதாட்டி என்றும் பாராமல் 4 காவலர்களும் அவரை பிடித்து கீழே தள்ளி போட்டு தரையில் இழுத்து காலால் உதைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் படுகாயமடைந்துள்ளார்.இதனையடுத்து அவரது மருமகள் சந்திரகலா 108 அவசர ஊர்திக்கு அழைத்து குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி சூசைமரியாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து உறவினர்கள்," மூதாட்டியை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த 4 காவலர்களையும் கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம்" என்று அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.