ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டம் மகேஷ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோத் பகத் என்பவரின் வீட்டில் நடந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் கழிப்பறை கோப்பையில் இருந்து 5 அடி நீளமுள்ள விஷ நாகப்பாம்பு ஒன்று வெளியே வந்தது. இந்தக் காட்சியை பார்த்த குடும்பத்தினர் பதற்றமடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
வனத்துறை அதிகாரிகள் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேல் நடந்த தீவிர முயற்சிக்குப் பிறகு, பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த நாகப்பாம்பு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
“மழைக்காலங்களில் பாம்புகள் குளிர்ச்சியும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களை நாடுவதால், இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகமாகும்,” என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மக்கள் மிகவும் பதற்றத்துடன் உள்ளனர்.
கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், இயற்கை வளங்களை பாதிக்காமல் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, வனத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.