மதுரை மக்கள் முன்னிலையில் ‘மதுரை 16’ பட ப்ரமோஷன்! Dhinasari Tamil %name%
மதுரை மண் சார்ந்த திரைப்படம் மதுரை மக்கள் முன்னிலையில் மதுரை 16 படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றது.
மதுரை 16 திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா, மதுரை விஷால் தி மாலில் மதுரை மக்கள் முன்னிலையில் ஆடல் பாடலுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்துனர்களாக டாக்டர் சரவணன் மற்றும் வாட்டர்மெலோன் ஸ்டார் டாக்டர் திவாகர் மற்றும் டைகர் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை 16 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவி சின்னயாஜீன் வில்லியம்ஸ், இயக்குனர் ஜான் தாமஸ், கதாநாயகன் ஜெரோம் விஜய், கதாநாயகி நிவேதா தினேஷ் மற்றும் பட குழுவினர்கள் பலர் பங்குபெற்றர். மேலும், இந்த நிகழ்ச்சியை, மதுரை அடங்கா அஜித் குரூப்ஸ் தல சபி தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் , கலந்து கொண்டவர்கள் மதுரை 16 திரைப்பட கலைஞர்களை வாழ்த்தினர் முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கிரைம் திரில்லர் படமாக இந்த திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மக்கள் முன்னிலையில் ‘மதுரை 16’ பட ப்ரமோஷன்! News First Appeared in Dhinasari Tamil