ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள பெடா ரோட்டேலா பகுதியில், ஜவாய் சிறுத்தை சரணாலய எல்லையில் நடந்த உணர்ச்சி பூர்வமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பசு ஒன்று, தனது கன்றைக் காப்பாற்ற ஒரு கொடூரமான சிறுத்தையை எதிர்கொண்டு விரட்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
12 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒரு சிறுத்தை பசுவின் கன்றைக் கூர்மையான பற்களால் கழுத்தைப் பிடித்து இழுக்கும் காட்சி தென்படுகிறது. அப்பொழுது தாய் பசு, தன்னுடைய உயிரை பற்றிய பயமின்றி, கன்றைப் பாதுகாக்க சிறுத்தையை நோக்கி முழு வேகத்தில் ஓடுகிறது.
திடீரென எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளான சிறுத்தை அங்கிருந்து ஓடிச்செல்கிறது. இந்த வீடியோ @AvPakad என்ற பயனர் X தளத்தில் (முந்தைய ட்விட்டர்) பதிவிட்ட பிறகு, நூற்றுக்கணக்கான பேர் பகிர்ந்து, பசுவின் தைரியத்தை பாராட்டியுள்ளனர்.
“>
“தாய்மை அன்பு என்றால் இதுதான்!” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “பசுவின் நேரத்திற்கான செயல்திறன் இல்லையென்றால், அந்த கன்று சிறுத்தையின் இரையாகியிருக்கும்” என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். இயற்கை உலகில், தாயின் அன்பும், குழந்தைக்காக செய்த தியாகமும் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை இந்த வீடியோ மிகச்சிறப்பாக காட்டுகிறது.
இது போன்ற வீடியோக்கள், விலங்குகளின் உணர்வுகளையும், மனிதர்கள் உணர வேண்டிய ஒற்றுமையையும் நாம் நினைவு கூரச் செய்கின்றன.