ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் கிரானைட் குவாரி ஒன்று உள்ளது. இங்கு திடீரென பாறைகள் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 6 தொழிலாளிகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் இறந்தவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடுபாடுகளுக்கு அடியில் சிக்கிய காயம் அடைந்த தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.