சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வனவிலங்கின் வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது. இதில் காட்டின் ‘ராஜா’ என அழைக்கப்படும் ஒரு ஆண் சிங்கம், தனது ‘ராணி’ பெண் சிங்கத்திடம் பயந்துவிடும் காட்சியே மக்கள் மனதில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 3ஆம் தேதி @AMAZlNGNATURE என்ற ட்விட்டர் (X) கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ 92 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைத் திரட்டியுள்ளது.
இந்த வீடியோவில் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை தனது நகங்களால் கடுமையாக தாக்குகிறது. எதிர்பாராத இந்த தாக்குதலில் ஆண் சிங்கம் நேராக சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்து பயந்து விடுகிறது.
பின்னர் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கிறபோது, அதற்குள்ள பீதியும், ராணியின் கோபத்தைக் கண்ட அதிர்ச்சியும் சிங்கத்தின் முகத்தில் தெளிவாக தெரிகிறது. இது சுற்றுலாப் பயணிகளை மட்டுமின்றி சமூக வலைதளத்தினரையும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது.
“>
இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். “இனி இந்த சிங்கம் ஒரு பெண் சிங்கத்துடன் விளையாடக் கூட நூறு முறை யோசிக்கும்” என்ற ஒருவர், “மனைவிகளோட விளையாடக்கூடாது” என இன்னொருவர், “சிங்கத்தின் முகத்தைப் பார்த்ததும் நானே சிரித்தேன்” என பலரும் பதிவிட்டுள்ளனர்.