இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய லக்கி லக்கி எரிமலை.. 20 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியாகும் தீக்குழம்பு!
TV9 Tamil News August 03, 2025 08:48 PM

ஜகார்த்தா, ஆகஸ்ட் 03 : இந்தோனேசியாவில் (Indonesia) உள்ள லக்கி லக்கி எரிமலை (Laki Laki Volcano) நேற்று (ஆகஸ்ட் 02, 2025) வெடித்து சிதறியது. இதன் காரணமாக இந்த எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறி வருகிறது. இந்த எரிமலை சமீப காலமாகவே அவ்வப்போது வெடித்து சிதறி வந்த நிலையில், தற்போது அதில் மிகப்பெரிய அளவு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்கி லக்கி எரிமலையின் தற்போதைய நிலை என்ன, அங்கிருக்கும் பொதுமக்களின் நிலை என்ன என்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய லக்கி லக்கி எரிமலை

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வலை பகுதியில் இருப்பதால் அங்கு பல எரிமலைகள் அமைந்துள்ளன. அங்கு குறிப்பிடத்தக்க எரிமலைகளில் ஒன்றுதான் விவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை. சுமார் 1,500 மீட்டர் உயரம் உள்ள இந்த எரிமலை லக்கி லக்கி என பிரபலமாக அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சம் மலையில் அமைந்துள்ள இந்த மாபெரும் எரிமலையை காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கமாக உள்ளது. என்னதான் இந்த எரிமலை அழகாக இருந்தாலும் அது ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது.

இதையும் படிங்க : திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்.. என்னாச்சு?

கரும் புகையால் சூழ்ந்த பகுதி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Exoplanet…
Mount Lewotobi Laki Laki’s volcano in Indonesia has erupted
By tareqttvA pic.twitter.com/QjjmJWsbju

— Black Hole (@konstructivizm)

அதாவது இந்த லக்கி லக்கி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறுவதை வழக்கமாக கொண்டது. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 02, 2025) லக்கி லக்கி பயங்கர சட்டத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு தீ குழம்புகள் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த எரிமலை ஒரு சில மணி நேரங்களிலேயே மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த இடம் முழுவதும் கரும்புவை சூழ்ந்து காணப்படுகிறது. எனவே எரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புர கிராமங்களில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றம்

இந்த எரிமலையில் இருந்து வெளியேறும் தீக்குழம்பு 8 கிலோ மீட்டர் தூரம் வரை படர்ந்து சென்ற நிலையில், எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.