தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், ஒரு மாநிலத்தில் ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுமானால் அந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள மற்ற மாநிலங்கள் விரும்பும்.
அந்த வகையில்தான் மம்தாபானர்ஜி, 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற ஒரு திட்டத்தை மேற்குவங்காளத்தில் கொண்டு வந்துள்ளதாக பார்க்கிறேன். திட்டங்கள் நன்றாக இருந்தால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்றார்.
தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருவது குறித்து கேள்வி எழுப்புகையில், ”ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போவதற்கு இது ஒரு முதல் காரணம்.
ஒரு நாட்டில் எவ்வளவு ஆணவக் கொலை நடக்கிறது என்பதை கணக்கெடுத்து பார்த்தாகனும். ஆணவக் கொலையை தடுக்க வேண்டும். அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. தனி சட்டம் இயற்றப்படுமா என்பதை முதல்-அமைச்சர்தான் சொல்வார். மேலும் மத்திய அரசு செய்யுமா? செய்யாதா? என்பது அவர்கள் இஷ்டம். அவர்கள் சொன்னால் அதனையும் நாங்கள் பின்பற்றுவோம். ஆக யாராவது செய்தால் தான் தடுக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?