தீபாவளியை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்... முன்பதிவு துவங்கியது!
Dinamaalai August 04, 2025 04:48 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவை-ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவை-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கோவையில் இருந்து வருகிற 7, 14, 21, 28 மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-06181) இயக்கப்படுகிறது. அதே போல, ஜெய்ப்பூரில் இருந்து கோவைக்கு 10, 17, 24, 31 மற்றும் அடுத்த மாதம் 7 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06182) இயக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.