அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், புதிதாக ஊடக செயலாளராக பதவி பெற்ற இளம்பெண்ணை பொதுவெளியில் வைத்து வர்ணித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக செயல்பட்டு வரும் டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயதான இளம்பெண் கரோலின் லெவிட் என்பவரை நியமித்தார். ஏற்கனவே உலகத்தில் நடக்கும் அனைத்து போர்களையும் நான் தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூப்பாடு போட்டு வரும் நிலையில், அதையே கரோலின் லெவிட் அதிகாரப்பூர்வமாக செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூட “ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல நாடுகளின் போரை நிறுத்தியதற்கு, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என வானளாவ புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பதிலுக்கு ட்ரம்ப் “கரோலின் மிகவும் பிரபலமாகிவிட்டார், அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திரத் துப்பாக்கி போல செயல்படுகிறது. கரோலினை விட சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது” என வர்ணித்து, புகழ்ந்து தள்ளியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Edit by Prasanth.K