'பார்க்கிங்' பட க்ளைமாக்ஸுக்கும் கமலுக்கும் இருக்கிற சம்பந்தம்! அவார்டு வாங்காம இருக்குமா?
CineReporters Tamil August 04, 2025 08:48 PM

kamal

பார்க்கிங் படத்திற்கு சிறந்த படம் என்ற அடிப்படையில் தேசிய விருது கிடைத்துள்ளது அனைவருக்குமே மகிழ்ச்சி. அதே நேரம் அயோத்தி படத்திற்கு கொடுக்கவில்லையே என்பது அதைவிட பெரிய வருத்தம். தேசிய விருது கிடைத்ததில் இருந்தே அந்தப் படத்தின் இயக்குனரை பல சேனல்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் பார்க்கிங் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி உருவானது என்பதை பற்றி கூறியிருக்கிறார்.

மேல் கீழ் என வாடகைக்கு இருக்கும் இருவருக்கு இடையில் கார் பார்க்கிங் செய்வதில் பிரச்சினை. அதில் மிகவும் கறார் பேர் வழியாக இருக்கும் எம்.எஸ். பாஸ்கர் கடைசியில் அந்த பிரச்சினையில் ஹரீஷ் கல்யாணை கொல்ல வேண்டும் என்ற முயற்சிக்கே சென்று விடுவார். ஆனால் கடைசியில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏன் நாம் இப்படி செய்தோம் என யோசிக்கும் அளவுக்கு எம்.எஸ் பாஸ்கரின் கேரக்டர் மாறிவிடும். இது கமல் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் எடுத்தேன் என கூறியிருக்கிறார் ராம்குமார். இதோ அவரிடம் எடுத்த பேட்டி:

பார்க்கிங் படத்தின் கிளைமேக்ஸில் ஐந்து நிமிடம் முன்னாடி வரைக்கும் இரண்டு பேரில் யாராவது காலியாக போறாங்க என்ற ஒரு மன நிலையில் தான் அந்த கதை இருந்தது. ஐந்து நிமிடத்தில் இதற்கான ஒரு முடிவை கொடுத்தாக வேண்டும் .அந்த ஒரு முடிவை எப்படி எடுத்தீர்கள்? இந்த மாதிரி பண்ணினால் ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்ற ஒரு கேள்வியை ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ: ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு அந்த காட்சியில் எம் எஸ் பாஸ்கரின் கேரக்டர் அமைந்திருக்கும். என்னதான் அவரை நாம் ஆசுவாசப்படுத்தினாலும் ஆடியன்ஸ் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு போன ஒருவரை எப்படி ஆசுவாசப்படுத்தி ஒரு அமைதியான நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற மனநிலையில்தான் ஆடியன்ஸும் யோசிப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம். நமக்கு பிடிக்காத ஒருத்தன், அவனுடைய குழந்தையை காப்பாத்தணும்ங்கிறது ஒன்னு இருக்கு. அவருடைய மனைவியை காப்பாத்தணும். ஒரு உயிர் உருவாவதற்கு எம்.எஸ்.பாஸ்கர் காரணமாக இருந்தார் என்பது மொத்த ஆடியன்ஸையும் கன்வின்ஸ் பண்ணி விடும் என்ற நம்பிக்கை தான் எனக்கு இருந்தது.

அவருடைய பர்பாமன்ஸாக இருக்கட்டும், இந்துஜாவின் பர்பாமன்ஸாக இருக்கட்டும். கிளைமாக்ஸில் இதெல்லாம் சேர்ந்து ஆடியன்ஸை கன்வின்ஸ் பண்ணிவிடும் என்று நான் நினைத்தேன். அதாவது, கமல் சார் அன்பே சிவம் படத்தில் கடைசி காட்சியில் ஒருத்தனை கொல்ல வேண்டும் என வந்து அவன் கிட்ட மன்னிப்பும் கேட்பது. அதுதான் கடவுள் என்று சொல்வார்.

அதுதான் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதுதான் இந்த படத்திலேயே அமைந்தது. எம்.எஸ்.பாஸ்கர் கடைசியில் கொல்லணும் என்ற ஒரு நிலைக்கு போய்விட்டு கடைசியில் நாம் ஏன் இந்த ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு போய்விட்டோம் என யோசிக்கும் ஒரு விஷயம் இருக்கு இல்லையா. அது ஆடியன்ஸை கன்வின்ஸ் செய்து விடும் .அதிலிருந்து எம் எஸ் பாஸ்கரின் கேரக்டரின் இமேஜ் மொத்தமாக மாறிவிடும். அந்த நம்பிக்கையில் தான் அதை வைத்தேன் என ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.