இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் ஒரு பார்க்கில் உள்ள ஓடையில் மார்ஸ் சென்ற குள்ள நீர்யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. பராமரிப்பாளர் நேரம் முடிந்ததும் அதனை வெளியே அனுப்ப முயற்சி செய்தார். ஆனால் அது வெளியே வரவில்லை. இருப்பினும் அவர் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பினார். ஆனால் அந்த குள்ள நீர்யானை மீண்டும் தண்ணீருகுள் ஓடி சென்றது.
இதையடுத்து அங்கு வந்த தாய் நீர்யானை ஒரு பார்வை பார்த்ததும் குட்டிக்குள்ள நீர்யானை உடனே தண்ணீரிலிருந்து வெளியே வந்து தனது தாயின் பின்னே கீழ்ப்படிந்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது சுவாரஸ்ய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.