மிஷ்கினாலே அதுதான்.. 'டிரெயின்' படத்துக்காக இப்படி பண்ணிட்டாரே? எல்லாம் VJS சொன்னதால
CineReporters Tamil August 05, 2025 01:48 AM

sethu

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம் டிரெயின். இந்தப் படம் ஒரு டார்க் திரில்லர் படமாக உருவாகி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம்தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தில் ஸ்ருதிஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். விஜய்சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படம் எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியானதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஆரம்பகாலங்களில் வாய்ப்புக்காக விஜய்சேதுபதி மிஷ்கினை அணுகியபோது நடிப்பு வரவில்லை என்று சொல்லி வெளியே அனுப்பியவர் மிஷ்கின். இதை மிஷ்கினே ஒரு மேடையில் கூறியிருக்கிறார். ஆனால் காலம் எவ்வளவு மாற்றத்தை கொண்டது என்பதற்கு இதுவே ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்த நிலையில் டிரெயின் படத்தை பற்றி மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது டிரெயின் பற்றி படம் எடுக்க வேண்டும் என நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருந்தாராம் மிஷ்கின். அப்படி உருவான படம் தான் டிரெயின். ஆனால் முதலில் இது 5 மணி நேர கதையாக உருவானது. அதனால் இரண்டு பாகமாக எடுக்க வேண்டிய சூழ் நிலை உருவானது. ஆனால் அந்த இரண்டு பாகங்களையும் இப்போது ஒரே பாகமாக அந்த இரண்டரை மணி நேரத்தில் கொடுக்கப் போவதாக மிஷ்கின் கூறியிருக்கிறார்.

அவரை பொறுத்தவரைக்கும் மிஷ்கின் ஒன்னு நினைத்தால் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் ஆகமாட்டார். ஆனால் இந்த விஷயத்தில் எப்படி காம்ப்ரமைஸ் ஆனார் என்று தெரியவில்லை. மேலும் நந்தலாலா படத்தின் போதே அந்தக் கதை கலைப்புலி எஸ். தாணுவுக்கு பிடிக்கவில்லையாம்.

இப்போதான் தெரிந்ததாம் ஏன் தாணுவுக்கு பிடிக்கவில்லை என்று. முழுக்க முழுக்க ஒரு சினிமாவை வியாபாரமாகவும் பார்க்க வேண்டும். கலை ரீதியாகவும் பார்க்க வேண்டும். வெறும் கலை ரீதியாக மட்டும் நான் பண்ண மாட்டேன் என தாணு கூறினாராம். ,மேலும் அவர் கூறும் போது ‘பணம் நாங்கள் வெளியில் வாங்கித்தான் பண்ணுகிறோம். படம் எங்களுக்கு லாபம் சம்பாதித்து தர வேண்டும்’

‘அது என் கம்பெனிக்கு நல்ல பேரை கொடுக்கணும். உனக்கும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். விஜய் சேதுபதிக்கும் நல்ல படமாக இருக்க வேண்டும்’ என்று கூறினாராம். விஜய் சேதுபதி சொன்னது என்னவெனில் ‘சார் நீங்கள் கொஞ்சம் டார்க்கா எடுப்பீங்க.கொஞ்சம் ரிஸ்காகவும் இருக்கும். நான் இப்போதான் கொஞ்சம் வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கேன். ஹீரோவாக ஒரு நல்ல அந்தஸ்துக்கு வந்துக்கிட்டு இருக்கேன். அது மிஸ்ஸாகாம பார்த்துக்கோங்க’ என கூறினாராம்.

train

அதனால் இந்த இரண்டுமே எனக்கு மிக முக்கியம். ஒரு தயாரிப்பாளர் பணம் போடுகிறார் என்றால் என்னுடைய இடத்தில் இருந்து மட்டும் நான் பார்க்க கூடாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் இந்தப் படத்துக்காக முதன் முறையாக நான் காம்ப்ரைஸ் ஆனேன் என மிஷ்கின் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.