சவூதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2022 ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது மீண்டும் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம் தொடங்கியது.
இது குறித்து சவூதி அரசின் செய்திப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில், சோமாலியா நாட்டைச் சேர்ந்த 4 பேரும், எத்தியோபியாவைச் சேர்ந்த ஒருவரும், சவூதிக்குள் போதைக்பொருள் கடத்தி வந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதியைச் சேர்ந்த நபருக்கு, அவரது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 முதல் சவூதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. இவர்களில் சுமார் 150 பேர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். கடந்த ஆண்டு சவூதி அரேபியில் 338 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை தோற்கடிக்கும் வகையில் இந்த ஆண்டு மரண தண்டனை அதிக வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தரவுகள் தெரிவித்துள்ளன.
மக்களிடையே ஒரு ஒழுங்கு ஏற்படவும், போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்கவும், மரண தண்டனை அவசியம் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடுக்க வேண்டும் என பல காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அந்த நாட்டின் முடிவில் மாற்றம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?