மீண்டும் அதிர்ச்சி... காதலனுக்கு விஷம் கொடுத்து கொலைச் செய்த இளம்பெண்!
Dinamaalai August 04, 2025 10:48 PM

கேரளாவில் காதலனுக்கு பழச்சாறில் விஷம் கலந்துக் கொடுத்து கொலை செய்து இளம்பெண் ஒருவர் அதிர செய்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் கேரளாவில் தனது கள்ளக்காதலனுக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொலைச் செய்துள்ளார் அதீனா எனும் பெண். 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் மதிராப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் 38வயது அன்சில்.  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அன்சிலுக்கு சோலாடு பகுதியில் வசித்து வரும் அதீனாவுடன் (30) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி அதீனாவின் வீட்டுக்கு அன்சில் சென்றிருந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் அன்சில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அவருடைய நண்பர்கள் சிலருக்கு அதீனா தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்றவர்கள்  அன்சிலை மீட்டு சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் அன்சில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவே போலீசார் கருதினர். அதன் அடிப்படையிலேயே விசாரணை நடத்தினர்


இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அன்சில், போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அதீனா தனக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். பிறகு அன்சில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதீனாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அன்சிலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.  அதீனாவின் வீட்டுக்கு அன்சில் அடிக்கடி சென்று தங்கி வந்த நிலையில்  எதற்காக அன்சிலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்தார்? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.