அமெரிக்கா 25% இறக்குமதி வரி... இந்திய ஆடை ஏற்றுமதியில் கடும் நெருக்கடி!
Dinamaalai August 05, 2025 02:48 AM

  இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 46,718 கோடி  மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.  அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் அறிவித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 7, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து    இந்திய ஆடைத் தொழில்துறை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.  இந்த வரியால், இந்தியாவின் ஆடை உற்பத்தித் துறையில் சுமார் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக    தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவின்  28% பங்கு   மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக கருதப்படுகிறது.  ஆனால், இந்த புதிய 25% வரியால் இந்திய ஆடைகள் அமெரிக்காவில் விலை உயர்ந்து, போட்டித்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் வங்கதேசம்  , வியட்நாம் , மற்றும் இந்தோனேஷியா   நாடுகளுக்கு ஆர்டர்களை மாற்றலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நாடுகள் குறைந்த வரி விகிதங்களால் விலை நன்மையைப் பெறுவதால், இந்தியாவின் ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் 10-20% குறையலாம் என ஹோம் டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய ஆடைத் தொழில்துறை, 4.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முக்கிய துறையாகும். இந்தத் துறையில் பருத்தி டி-ஷர்ட்கள், பெண்கள் உடைகள், மற்றும் குழந்தைகள் ஆடைகள் ஆகியவை அமெரிக்காவுக்கு முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்ளன.  புதிய வரியால் விலைகள் உயர்ந்து, ஆர்டர்கள் ரத்தாகலாம் அல்லது விலைகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம், இது சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும்.


“இந்த வரி, இந்தியாவின் போட்டித்தன்மையை பறிக்கிறது. வங்கதேசமும், வியட்நாமும் இதை பயன்படுத்தி சந்தையை கைப்பற்றலாம்,” என ஏற்றுமதி நிபுணர் விகாஸ் சிங் சவ்ஹான் கூறினார். இந்த வரி, இந்தியாவின் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு எதிராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியாவுக்கு கூடுதல் தண்டனை வரியும் விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.