மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் திஸ்கான் பகுதியில் சனிக்கிழமை மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதர்வா கோபால் தாய்டே என்ற 16 வயது சிறுவன், தனது தாயிடம் பல நாட்களாக மொபைல் போன் வாங்கித் தரும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவரது தாய் தொடர்ந்து மறுத்ததை தொடர்ந்து, அதர்வா ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள மலைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், மருத்துவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என உறுதி செய்தனர்.
அதர்வா, காவல்துறை ஆட்சேர்ப்பு தேர்விற்காக தயாராகி வந்தார். தன்னுடைய தேவைக்காக மொபைல் வேண்டுமென்று தொடர்ந்து கூறியும், பெற்றோர் மறுத்ததே அவரை மனமுடைய செய்ததாக கூறப்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் கடந்த ஆண்டிலும் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன. ஒருமுறை பிறந்தநாளில் மொபைல் வாங்கித் தராத தாய் மீது கோபம் கொண்ட 15 வயது சிறுவன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஒரு 18 வயது இளைஞர், ஐபோன் வாங்கித் தராத தந்தையின் நடவடிக்கையால் மனவேதனையில் சிக்கி உயிரை விடத் தவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கான உணர்வுப் புரிதல் குறைவாக இருப்பதையும், சமூகத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் போட்டி மனப்பான்மையும் ஏற்படுத்தும் மன அழுத்தத்தையும் காட்டுகின்றன.
இளம் வயதில் உள்ள மாணவர்களுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வும், பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து உரிய வழிகாட்டலும் இன்றியமையாத தேவை என குழந்தைகள் நலவாரியங்கள் வலியுறுத்தி வருகின்றன.