டெல்லியில் நடைபயிற்சியின் போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதா கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அவர் காலையில் நடைபயிற்சி சென்றுள்ளார்.
ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் எம்.பி. சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் உள்துறை அமைச்சரிடம் கடிதமும் அளித்துள்ளார். டெல்லியில் உயர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியில், சுதா எம்.பியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?